கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் ஓதப்பை தரைப்பாலம் மூடப்பட்டுள்ளது. அதனால் அதன் வழியாக செல்லும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து வினடிக்கு 10000 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் ஆற்று பகுதிக்குள் வர வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர் வெள்ள எச்சரிக்கை விடுத்திருந்தார். அதனை தொடர்ந்து இன்று பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. அதனால் வெள்ள பெருக்கு அதிகமாக இருப்பதால் ஓதப்பை தரைபபாலம் மூடப்பட்டது.

அந்த பாலம் வழியாக செல்ல கூடிய ஊத்துக்கோட்டை திருவள்ளூர் போக்குவரத்து வழிதடத்தில் செல்ல கூடிய 100 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். ஓதப்பை தரைபபாலம் மூடப்பட்டதால் ஊத்துக்கோட்டையை சுற்றி உள்ள கிராம மக்கள் திருவள்ளூர் செல்ல வேண்டும் என்றால் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை திருவள்ளூர் இடையே தரைப்பாலம் அருகே மேம்பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெருவதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.