spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்வடமாநில தொழிலாளர்களால் காவலர் தாக்கப்பட்ட சம்பவம் – வட்டாட்சியர் ஆய்வு

வடமாநில தொழிலாளர்களால் காவலர் தாக்கப்பட்ட சம்பவம் – வட்டாட்சியர் ஆய்வு

-

- Advertisement -

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வடமாநில தொழிலாளர்களால் காவலர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அம்பத்தூர் வட்டாட்சியர்  சம்பவம் நடந்த  நிறுவனத்தில் நேரில் ஆய்வு செய்தார்.

 வடமாநில தொழிலாளர்களால் காவலர் தாக்கப்பட்ட சம்பவம் – வட்டாட்சியர் ஆய்வு

we-r-hiring

அம்பத்தூர் பட்டரவாக்கத்தில் கடந்த 23 ம் தேதி ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் குடிபோதையில் வட மாநில தொழிலாளர்கள் இரு கும்பலாக மோதிகொண்ட விவகாரத்தில், தொழிற்சாலையில்   விசாரிக்கச் சென்ற காவலர் ரகுபதியை  தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்ட 28 வடமாநில தொழிலாளர்களையும் அடையாளம் காணப்பட்டு  செங்குன்றம் காவல்துனை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில்  தனிப்படை காவல் துறையினர் மற்றும் 50 க்கும் மேற்பட்ட தமிழ்நாடு சிறப்பு காவல் அதிரடிபடையினர்  கைது செய்து   நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வடமாநில தொழிலாளர்களால் காவலர் தாக்கப்பட்ட சம்பவம் – வட்டாட்சியர் ஆய்வு

இந்த நிலையில் அம்பத்தூர் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் நிறுவனத்தில்  ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்திட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தற்போது வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டு நிறுவன உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

வடமாநில தொழிலாளர்களால் காவலர் தாக்கப்பட்ட சம்பவம் – வட்டாட்சியர் ஆய்வு

MUST READ