பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று (ஆகஸ்ட் 08) விவாதம் தொடங்கவுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்த அமலாக்கத்துறை!
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கோரி, மக்களவைச் செயலகத்தில் கடிதம் அளித்தது.
இந்த தீர்மானம் ஏற்பட்டிருக்கும் நிலையில், இன்றும், நாளையும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக, ஆகஸ்ட் 10- ஆம் தேதி தீர்மானத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க.வுக்கு மட்டுமே பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை விட அதிகமாக, அதாவது 301 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். இதை தவிர, லோக் ஜனசக்தி, தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் பிரிவு, சிவசேனா ஷிண்டே பிரிவு உள்ளிட்டோர் பா.ஜ.க.வுக்கு ஆதரவு நிலைப்பாடு கொண்டிருக்கிறார்கள்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 140 மக்களவை உறுப்பினர் ஆதரிக்கின்றனர். அதே நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு ஆதரவாக 330 வாக்குகள் கிட்டும் என்று பா.ஜ.க. கணித்துள்ளது. இதைத் தவிர, பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட நடுநிலை கட்சிகளுக்கு 60 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர்.
“கருணாநிதி பெயரை முதலமைச்சர் பதவிக்கு முன்மொழிந்த எம்.ஜி.ஆர்.”- சுவாரஸ்ய தகவல்கள்!
தீர்மானம் தோல்வியடையும் என்பது தெளிவாக தெரிந்தும், மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது.