spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நாளை தேர்தல்!

21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நாளை தேர்தல்!

-

- Advertisement -

 

21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நாளை தேர்தல்!

we-r-hiring

தமிழகம், புதுச்சேரி உள்பட மொத்தம் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நாளை (ஏப்ரல் 19) முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்… வேட்டையன் இயக்குநர் வேண்டுகோள்…

ராஜஸ்தானில் 12, உத்தரப்பிரதேசத்தில் 8, மத்திய பிரதேசத்தில் 6, மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், அசாம் ஆகிய மாநிலத்தில் தலா 5 தொகுதிகள், பீகார் 4, மேற்கு வங்கம் 3, அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூரில் தலா 2 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (ஏப்ரல் 19) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதேபோல், அந்தமான் நிக்கோபார், ஜம்மு காஷ்மீர், சத்தீஸ்கர், லட்சத்தீவு, மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிகளில் நாளை (ஏப்ரல் 19) தேர்தல் நடைபெறவுள்ளது.

முதற்கட்ட தேர்தலில் நாகாலாந்து, சிக்கிம், திரிபுராவில் தலா ஒரு தொகுதியில் நாளை (ஏப்ரல் 19) வாக்குப்பதிவு நடக்கிறது.

மக்களவை முதற்கட்டத் தேர்தலில் 8 மத்திய அமைச்சர்கள், முன்னாள் ஆளுநர், 2 முன்னாள் முதலமைச்சர்கள் போட்டியிடுகின்றனர். மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, கிரண் ரிஜிஜூ, எல்.முருகன், ஜிதேந்திர சிங், சர்வானந்த் சோனோவால், அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோரும் களத்தில் உள்ளனர்.

இளையராஜா பயோபிக் படப்பிடிப்பு… தனுஷ் வைத்த கோரிக்கை…

திரிபுராவில் முன்னாள் முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ், அருணாச்சலப் பிரதேசத்தில் முன்னாள் முதலமைச்சர் நாவம் துகி, புதுச்சேரி ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் முதற்கட்டத் தேர்தலில் தென் சென்னையில் களமிறங்கியுள்ளார்.

MUST READ