Homeசெய்திகள்இந்தியாநான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

-

 

நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
Photo: ANI

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் தெலங்கானா ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (டிச.03) காலை 08.00 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகளும், பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும்.

சரத்குமாருடன் சசிகுமார் நடிக்கும் ‘நா நா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் 199 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 25- ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் 230 தொகுதிகளுக்கு நவம்பர் 17- ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் நவம்பர் 07- ஆம் தேதி மற்றும் நவம்பர் 17- ஆம் தேதி இரு கட்டங்களாக நடந்தது.

அமீர் நடிப்பில் உருவாகும் மாயவலை …. டீசர் குறித்த அறிவிப்பு!

தற்போதைய நிலவரப்படி, நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.

MUST READ