Homeசெய்திகள்இந்தியா4,000 மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ரூபாய் 99- க்கு டிக்கெட்டுகள் விற்பனை!

4,000 மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ரூபாய் 99- க்கு டிக்கெட்டுகள் விற்பனை!

-

- Advertisement -

 

4,000 மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ரூபாய் 99- க்கு டிக்கெட்டுகள் விற்பனை!
File Photo

இந்தியாவில் தேசிய சினிமா தினம் இன்று (அக்.13) கொண்டாடப்படுகிறது. உலக அளவில் சினிமா என்றாலே, அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகவே உள்ளது. அதிலும் இந்தியாவில் உள்ள ரசிகர்கள், சினிமாவைத் தங்கள் வாழ்க்கையோடு ஒன்றிணைந்து பார்ப்பார்கள்.

தமிழகத்திற்கு காவிரியில் 3,000 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

அதனால் தான் உலகிலேயே அதிக சினிமா திரைப்படம் தயாரிக்கும் நாளாக, இந்தியா விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் 1,800- க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. கடந்த 2013- ஆம் ஆண்டு நிலவரப்படி, சினிமா வெளியீட்டில் நைஜீரியா நாட்டை விட அதிக படங்களைத் தயாரிப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதனால் ரசிகர் சினிமா மீது கொண்டிருக்கும் காதலை மதிக்கும் விதமாகவும், பார்வையாளர்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா, இந்தாண்டு அக்டோபர் 13- ஆம் தேதி தேசிய சினிமா தினம் கொண்டாடப்படும் என அறிவித்திருந்தது.

562 நியாய விலைக்கடைகளில் யுபிஐ பரிவர்த்தனை அறிமுகம்!

அதன்படி, இன்று (அக்.13) ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, சுமார் 4,000 மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 99 ரூபாய்க்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

MUST READ