Homeசெய்திகள்இந்தியாவைகுண்ட ஏகாதசி- திருப்பதியில் 11 நாட்களில் ரூ.42.88 கோடி காணிக்கை

வைகுண்ட ஏகாதசி- திருப்பதியில் 11 நாட்களில் ரூ.42.88 கோடி காணிக்கை

-

- Advertisement -

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 1ஆம் தேதி முதல் வைகுண்ட ஏகாதசி சொற்கவாசல் திறக்கப்பட்டு 10 நாட்கள் உள்பட 11 நாட்களில் 7.08 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து 42.88 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

tirupati

we-r-hiring

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 1 புத்தாண்டு தொடங்கி இரண்டாம் தேதி வைகுண்ட ஏகாதசி ஒட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஜனவரி 1ஆம் தேதி முதல் நேற்று வரை 7 லட்சத்து 8 ஆயிரத்து 177 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 731 பக்தர்கள் மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.42.88 கோடி காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

2 ம் தேதி முதல் நேற்று நள்ளிரவு 12 மணி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக 6 லட்சத்து 5 ஆயிரத்து 76 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதன் பிறகு சொர்க்கவாசல் ஜீயர்கள் முன்னிலையில் ஆகம முறைப்படி அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க சொர்க்கவாசல் கதவை மூடிய பின்னர் ஏகாந்த சேவை நடைபெற்று கோவில் கதவுகள் அடைக்கப்பட்டது. மீண்டும் வழக்கம்போல் இன்று அதிகாலை மார்கழி மாத திருப்பாவை பாசுரத்துடன் நித்திய பூஜைகள் தொடங்கப்பட்டு சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வைகுண்ட ஏகாதசியில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக ரூ.39.40 கோடி செலுத்தினர்.

MUST READ