- Advertisement -
நூதன முறையில் கடத்தப்பட்ட 454 கிராம் தங்கம் பறிமுதல்
ஹைதராபாத்தில் நூதன முறைகள் கடத்தப்பட்ட 454 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து விமான மூலம் ஹைதராபாத் வந்த பயணியை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையின் போது அந்த பயணி முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதை எடுத்து அவர் கொண்டு வந்த பொருட்களை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சூட்கேஸில் பயன்படுத்தப்படும் சிறிய வகை ஆணி கம்பி போன்ற தங்கத்தை மாற்றி கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகளுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக அதன் நிறத்தையும் மாற்றி எடுத்து வந்தது தெரிய வந்தது.
454 கிராம் எடை கொண்ட 64 சிறிய ஆணிகள் 16 தங்க கம்பிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 21 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.