spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கும் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கும் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

-

- Advertisement -

 

5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கும் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!
Video Crop Image

கொரோனா காலத்தில் இருந்து வழங்கப்பட்டு வரும் 5 கிலோ இலவச உணவுத் தானியத் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 81.30 கோடி ஏழைகள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 5 கிலோ கோதுமை (அல்லது) அரிசியை இலவசமாகப் பெறலாம். இதனால் மத்திய அரசுக்கு 11.80 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

we-r-hiring

மழைநீர் சூழ்துள்ள வீட்டில் வசிக்கும் மூதாட்டி – நடவடிக்கை எடுக்குமா? பாலவேடு முதல்நிலை ஊராட்சி!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

ஏழைகளின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச தானிய விநியோகம் தொடரும் என்றார்.

ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது கன மழை பெய்து வருகிறது.

அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் வறுமையிலும் வறுமையில் உள்ள பிரிவினருக்கு மாதம் 35 கிலோ இலவச அரிசி அல்லது கோதுமையைப் பெற்று வருகின்றனர். மற்ற ரேஷன் அட்டைத்தாரர்கள், அந்தந்த மாநிலங்களில் அவர்கள் பெற தகுதியுடைய தானிய அளவுடன், 5 கிலோ கூடுதலாக அரிசி அல்லது கோதுமையை கூடுதலாகப் பெறுகின்றனர்.

‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்தின் படி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களும், அவர்களது இருப்பிடத்தில் இந்த சலுகையைப் பெற முடியும் என்பதால், 80 கோடிக்கும் மேற்பட்டோரின் உணவுப் பாதுகாப்பு உறுதிச் செய்யப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

MUST READ