Homeசெய்திகள்இந்தியாநண்பரின் திருமணத்தில் சிரித்து கொண்டே மேடையில் மாரடைப்பில் இறந்த நண்பர்

நண்பரின் திருமணத்தில் சிரித்து கொண்டே மேடையில் மாரடைப்பில் இறந்த நண்பர்

-

- Advertisement -

நண்பரின் திருமணத்தில் சிரித்து கொண்டே மேடையில் மாரடைப்பில் இறந்த நண்பர்
நண்பரின் திருமணத்தில் நினைவு பரிசு வழங்கி சிரித்து கொண்டே மேடையில் மாரடைப்பில்  நண்பர் ஒருவர் இறந்துவிட்டார்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கிருஷ்ணகிரி மண்டலம் பெனுமடா கிராமத்தை சேர்ந்த வம்சி. பெங்களூரில் அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் அவரது சொந்த ஊரில் நண்பரின் திருமணத்திற்காக நேற்று ஊருக்கு வந்திருக்கிறார்.

திருமணத்தில் நண்பர்களுடன் ஜாலியாக ஆடி பாடி கொண்டுருந்த வம்சி மேடையில் புதுமண தம்பதிக்கு நினைவு பரிசை நண்பர்களுடன் சென்று வழங்கினார். அப்போது அனைவரும் சிரித்து கொண்டே போட்டோக்கு போஸ் கொடுத்து கொண்டுருந்த நிலையில் புதுமண தம்பதி நினைவு பரிசை பிரித்து கொண்டுருந்தபோது வம்சி சிரித்து கொண்டே மேடையில் சரிந்து விழுந்துள்ளார்.

உடனடியாக சக நண்பர்கள் அவரை பிடித்து அவரை டோன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அனைவருடனும் சிரித்து பேசி கொண்டுருந்த நண்பர் திருமண மேடையிலேயே இறந்தது திருமண வீட்டில் சோகத்தை ஏற்படுத்தியது.

அதானியை வைத்து இந்தியாவைவே வேரறுக்க சூழ்ச்சி… மேற்கத்திய நாடுகள் சதி… துணைபோகும் எதிர்கட்சிகள்..?

 

MUST READ