Homeசெய்திகள்இந்தியா130 கி.மீ வேகத்தில் சென்ற ரயில் – திடீரென பிரேக் பிடித்ததால் இருவர் பலி.!

130 கி.மீ வேகத்தில் சென்ற ரயில் – திடீரென பிரேக் பிடித்ததால் இருவர் பலி.!

-

130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற ரயில் – திடீர் பிரேக்காள் இருவர் பலி.!
130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற ரயில் – திடீர் பிரேக்காள் இருவர் பலி.!

130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்த ரயிலில் திடீரென பிரேக் பிடித்ததால் அதில் படுகாயமடைந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஒடிசா மாநிலம் பூரியில் இருந்து புதுடெல்லியை நோக்கி சென்று கொண்டிருந்த புருஷோத்தமன் எக்ஸ்பிரஸ் நள்ளிரவு 12:5 மணி அளவில் ஜார்கண்ட் மாநிலம் கோமோ மற்றும் கோடெர்மா ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது அப்போது பர்சாபத் கிராமம் அருகே மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது இதனை கவனித்த ரயில் ஓட்டுநர் 130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்த ரயிலை எமர்ஜென்சி பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார்

130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற ரயில்
130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற ரயில்

இதனை சிறிதும் எதிர்பாராத பயணிகள் சிலர் காயம் அடைந்தனர் இதில் இருவர் மட்டும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிழக்கு மத்திய ரயில்வேயில் தன்பாத் ரயில்வே கோட்ட மேலாளர் கே.கே சின்ஹா மற்றும் மூத்த அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர். இதனால் சுமார் 4 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பின்பு தன்பாத் ரயில்வே கோட்டத்தின் கீழ் உள்ள கிராண்ட் கார்டு லைனில் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன.

130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற ரயில்
130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற ரயில்

இந்நிலையில் உயிரிழந்த இருவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

MUST READ