வருகின்ற அக்டோபர் மாதம் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை டில்லி, மும்பை மற்றும் பெங்களூருவில் சர்வதேச காபி திருவிழா நடைபெற உள்ளது என ஐ.ஐ.சி.எப்., தெரிவித்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு, பெங்களூருவில் உலக காபி மாநாடு நடந்தது. இந்நிகழ்ச்சி, இந்திய காபி போர்டு பங்களிப்புடன் நடந்தது. இந்நிகழ்ச்சியில், உலகம் முழுவதும் இருந்து 2,400 பிரதிநிதிகள், 117 சிறப்பு பேச்சாளர்கள் உட்பட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், 2024 இந்திய சர்வதேச மெகா காபி திருவிழா, இம்மாதம் (அக்டோபர்) டில்லி, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய மூன்று நகரங்களில் நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக, டில்லியில் உள்ள பசிபிக் மால், தாகூர் பூங்காவில், அக்டோபர் – 4 முதல் 6ம் தேதி வரை இந்திய, சர்வதேச மெகா காபி திருவிழா நடைபெறுகிறது.
திருவிழாவின் 2வது நிகழ்ச்சியாக ,மும்பை, குர்லாவில் உள்ள போனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில், அக்டோபர் 11 முதல் 13ம் தேதி வரை நடைபெறுகிறது.