
தனக்கு இந்திய குடியுரிமைக் கிடைத்திருப்பதற்கான ஆவணங்களை பாலிவுட் நடிகர் அக்ஷ்ய்குமார் வெளியிட்டுள்ளார்.

பைரா… ஃப்ரம் தி வேர்ல்ட் ஆஃப் தேவரா……. சைஃப் அலிகான் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
கனடா நாட்டின் குடியுரிமை வைத்திருந்த அக்ஷ்ய் குமார் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தனர். குறிப்பாக, அக்ஷ்ய் குமார் தான் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் கனடாவில் முதலீடு செய்வதாகவும், அவருக்கு இந்தியா மீது பற்று இல்லை என்று பலரும் கூறி வந்தனர். இதையடுத்து, தனது பாஸ்போர்ட்டை அக்ஷ்ய் குமார், கனடா அரசிடம் ஒப்படைத்திருந்தார்.
இந்த நிலையில், தனக்கு இந்திய குடியுரிமைக் கிடைத்திருப்பதாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அக்ஷ்ய் குமார், அது தொடர்பான ஆவணங்களையும் வெளியிட்டுள்ளார்.
சந்தானம் நடிக்கும் ‘கிக்’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் உள்ளிட்ட பல்வேறு முன்னோடி திட்டங்களை கிராமம் வரை சென்று வெற்றியடைந்த நிலையில், அக்ஷ்ய் குமாருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டிருக்கலாம் என்று தகவல் கூறுகின்றன. பாலிவுட் திரையுலகில் மிக அதிக சம்பளம் பெரும் நடிகராக அக்ஷ்ய் குமார் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.