Homeசெய்திகள்இந்தியாசுங்கச்சாவடிகளை முழுவதுமாக அகற்ற அனைத்து கட்சிகளும் சேர்ந்து போராட வேண்டும் - வழக்கறிஞர் வில்சன் எம்.பி....

சுங்கச்சாவடிகளை முழுவதுமாக அகற்ற அனைத்து கட்சிகளும் சேர்ந்து போராட வேண்டும் – வழக்கறிஞர் வில்சன் எம்.பி. பேட்டி

-

- Advertisement -

சுங்கச்சாவடிகளை முழுவதுமாக அகற்ற அனைத்து கட்சிகளும் சேர்ந்து போராட வேண்டும் - வழக்கறிஞர் வில்சன் எம்.பி. பேட்டி

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்ற தேசிய அளவில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்;
நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கவன ஈர்ப்பு கேள்வி எழுப்பி இருந்தேன். அதில் இந்தியா முழுவதும் வசூலிக்கப்படும் டோல் பிளாசா கட்டணம் அகற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தேன். அதற்கு உதாரணமாக சென்னையில் உள்ள பரனூர் டோல் பிளாசாவில் கிட்டத்தட்ட முதலீடுக்கு மேல் சுமார் 28.54 கோடி ரூபாய் லாபம் ஈட்டி உள்ளனர். இவ்வாறு முதலீடுக்கு மேல் லாபம் ஈட்டி இருந்தால் 2008 இல் கொண்டுவந்த சட்ட வரைவு படி 60% தள்ளுபடி கொடுக்க வேண்டும்.
அப்படி லாபம் ஈட்டி வரும் பரனூர் டோல் பிளாசாவில் இன்று வரை 100% வசூல் செய்து வருகிறார்கள். அது தவிர கார்ப்பரேஷன் லிமிட்டில் 10 கிலோமீட்டர்-குள் சுமார் ஐந்து டோல் பிளாசாக்கள் உள்ளதாக எடுத்துக் காட்டாக கூறியுள்ளார்.

சுங்கச்சாவடிகளை முழுவதுமாக அகற்ற அனைத்து கட்சிகளும் சேர்ந்து போராட வேண்டும் - வழக்கறிஞர் வில்சன் எம்.பி. பேட்டி
பரனூர் டோல் பிளாசா

மேலும் அதே போல் 2008 விதிபடி சுமார் 20 டோல் பிளாசா 60 கிலோ மீட்டர் வரம்பிற்குள் அமைக்கப்பட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது. 2008 விதிமுறைப் படி 60 கீ.மீ-க்குள் ஒரு டோல் பிளாசாவுக்கு மேல் கூடுதலாக மற்றொரு டோல் பிளாச இருக்கக் கூடாது என்று விதிமுறை இருக்கிறது.

இந்த கேள்விக்கு ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா பதிலளிக்கும்போது, 60 கிலோ மீட்டருக்குள் ஒன்றுக்கு மேல் கூடுதலாக மற்றொரு டோல் பிளாசா வைத்துக் கொள்ளலாம்.

இதற்கு முன்பு நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் 60 கிலோ மீட்டருக்குள் இன்னொரு டோல் பிளாசா வைக்க முடியாது. அப்படி ஒன்று இருந்தால் அகற்றுவோம் என்று உறுதிமொழி அளித்திருந்தார் . ஆனால் தற்பொழுது ஹர்ஷ் மல்ஹோத்ரா இவ்வாறு அமைக்கலாம் என கூறியுள்ளதை பார்த்தால் நிதின் கட்கரி கூறியதை மீறி அமைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

பரனூர் டோல் பிளாசாவில் 40% வரை கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஹர்ஷ் மல்ஹோத்ரா கூறும்போது, வசூலிக்கப்பட்ட 28.54 கோடி ரூபாய் முழுவதையும் CONSOLIDATED FUND OF INDIA- வில் கட்டி விட்டோம் என்றும் இதற்கு மேலும் வசூல் செய்யப்படும் அனைத்து கட்டணங்களையும் CONSOLIDATED FUND OF INDIA- வில் கட்டுவோம் இதனை மாற்றவும் முடியாது, குறைக்கவும் முடியாது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் கூறுவது சரியான பதில் இல்லை, ஏனென்றால் 2008 (6) விதி படி 60% தள்ளுபடி செய்து 40% மட்டுமே வசூல் செய்ய முடியும். அவ்வளவுதான் வசூலிக்க வேண்டும். இதை சுட்டிக்காட்டியும் அவர் இப்படி முரண்பாடான ஒரு பதில் அளித்து இருக்கிறார்.

அப்படியானால் நிதின் கட்கரி கூறியது காற்றில் போய் விட்டதா என்கிறார் திமுக எம்.பி., வில்சன். இவ்வாறு தொலைக்காட்சியில் பேட்டி அளித்துள்ளார்.

MUST READ