Homeசெய்திகள்இந்தியாஅதானி குழுமம் மீது குற்றச்சாட்டு- பங்குகள் விலை 35,600 கோடி சரிவு

அதானி குழுமம் மீது குற்றச்சாட்டு- பங்குகள் விலை 35,600 கோடி சரிவு

-

அதானி குழுமம் மீது குற்றச்சாட்டு- பங்குகள் விலை 35,600 கோடி சரிவு

அதானி குடும்ப உறுப்பினர்கள், வர்த்தக கூட்டாளிகள் மறைமுக நிதியை (Opaque Funds) பயன்படுத்தி அதானி குழும நிறுவன பங்குகளில் முறைகேடு செய்துள்ளதாக OCCRPA அமைப்பு அறிக்கை வெளியிட்டது.

Image

அதானி குடும்பத்துக்கு நெருக்கமான இரண்டு பேர் மொரிசியஸ் நாடு வழியாக அதானி நிறுவனங்களின் பங்குகளில் ரகசியமாக பல மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாக ஓ.சி.சி.ஆர்.பி (OCCRP) நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அறிக்கையின்படி, அதானி குழுமம் ரகசியமாக தனது சொந்த பங்குகளை வாங்கி பின்னர் பங்குச் சந்தையில் மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்தது. 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செபி இந்த குழப்பத்தை அறிந்திருந்தது, ஆனால் அதானியின் நண்பர் மோடி பிரதமரானவுடன், செபி விசாரணையில் ஆர்வம் காட்டவில்லை.

அதானி குழும நிறுவன பங்குகளில் முறைகேடாக குடும்பத்தினரே முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியானதால், அதானி எண்டர்பிரைசஸ் 2%, அதானி கிரீன் என்ர்ஜி 3%, தானி பவர் 2.6%, அதானி டோட்டல் கேஸ் 1.9%, அதானி டிரான்ஸ்மிஷன் & வில்மர் 1.8% என தங்கள் பங்குகளில் சரிவை சந்தித்துள்ளன. அதானி பங்குகளின் மதிப்பு சில மணி நேரத்தில் 35,600 கோடி சரிவு கண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ