spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாசெங்கோலை காங்கிரஸ் அவமதிக்கிறது -அமித்ஷா

செங்கோலை காங்கிரஸ் அவமதிக்கிறது -அமித்ஷா

-

- Advertisement -

செங்கோலை காங்கிரஸ் அவமதிக்கிறது -அமித்ஷா

ஆங்கிலேயர் ஆட்சி ஒப்படைப்பின் அடையாளமாக செங்கோல் தரப்படவில்லை என காங்கிரஸ் கூறிய நிலையில், அதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.

Image

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வரும் மே 28- ஆம் தேதி அன்று மதியம் 12.30 மணிக்கு திறந்து வைக்கவுள்ளார். அப்போது, சோழர் காலத்து செங்கோல் மாதிரி புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நிறுவப்படவுள்ளது. இந்நிலையில் 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியை ஒப்படைத்ததன் அடையாளமாக செங்கோல் வழங்கப்படவில்லை என்றும், தமிழ்நாட்டின் அரசியலுக்காக செங்கோலைப் பற்றிய தகவலை திரிக்கிறார்கள் எனவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். 1947 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து செங்கோல் நேருவுக்கு வழங்கப்பட்டது மட்டுமே உண்மை எனவும் காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

we-r-hiring

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டு ஆதினம் வழங்கிய செங்கோலை அவமதிக்கிறது காங்கிரஸ். திருவாவடுதுறை ஆதீனம், ஒரு புனித சைவ மடம், இந்தியா சுதந்திரம் பெற்ற நேரத்தில் செங்கோலின் முக்கியத்துவத்தைப் பற்றி கூறியதை காங்கிரஸ் போலி என்கிறது. ஆதின செங்கோலின் வரலாறு போலி என கூறுவதை காங்கிரஸ் மாற்றிக் கொள்ள வேண்டும். இந்திய கலாச்சாரம், பண்பாட்டை காங்கிரஸ் ஏன் வெறுக்கிறது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

MUST READ