பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர்சிங் பாதல்-ஐ பொற்கோயிலில் வைத்து சுட்டுக்கொல்ல முயற்சி நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


சிரேோன்மணி அகாலிதளம் கட்சியின் தலைவரும், பஞ்சாப் மாநில முன்னாள் துணை முதலமைச்சருமான சுக்பீர்சிங் பாதல், முந்தய ஆட்சியில் செய்த தவறுகளுக்காக சீக்கிய அமைப்பு ஒன்று மத தண்டனை விதித்தது. இதனால், அவர் அமர்தசரசில் உள்ள பொற்கோயிலில் தூய்மை மற்றும் காவல் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த மர்மநபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுக்பீர்சிங் பாதலை நோக்கி சுட்டார். இதனை கவனித்த அருகில் இருந்த நபர் அவரிடம் இருந்த துப்பாக்கியை தட்டிவிட்டார். இதனால் சுக்பீர்சிங் பாதல் நூலிழையில் உயிர் தப்பினார்.

பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்த முயன்ற நபரை அங்கிருந்தவர்கள் பிடித்தது, காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.


