Homeசெய்திகள்இந்தியாஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 5 நாட்கள் அமலாக்கத்துறை காவல்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 5 நாட்கள் அமலாக்கத்துறை காவல்

-

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக கோரி பாஜகவினர் முற்றுகை போராட்டம்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் மேலும் 5 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் புதிதாக கொண்டுவரப்பட்ட முதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அம்மாநில முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகித்த அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. இது தொடர்பாக அவர் பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால் அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் மேலும் 5 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்.1 வரை அமலாக்கத்துறை காவலை நீட்டிப்பு செய்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாங்கள் விரும்பும் வரை அமலாக்கத்துறை எங்களை விசாரிக்கலாம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜராக வந்த போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்,
இதுவரை எந்த நீதிமன்றமும் என்னை குற்றவாளி என்று தீர்ப்பளிக்கவில்லை
சிபிஐ 31,000 பக்கங்கள், ED 25,000 பங்கங்களில் என் மீதான குற்றச்சாட்டை தாக்கல் செய்திருக்கின்றன. வெறுமென 4 பேர் என்னை பற்றி கூறியதால் நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன். அமலாக்கத்துறை, ஆம் ஆத்மி கட்சியை உடைக்கவே என்னை கைது செய்திருக்கிறது என கூறினார்.

MUST READ