அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு திறப்பு விழா காணவிருந்தாலும், கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் எனக் கூறப்படுகிறது.
‘தங்கலான்’ படத்துக்காக மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் விக்ரம்…..தனஞ்ஜெயன் கொடுத்த அப்டேட்!
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள், கடந்த 2020- ஆம் ஆண்டு தொடங்கின. மூன்று கட்டங்களாக கோயில் கட்டப்படும் நிலையில், தற்போது முதற்கட்டம் ஓரிரு நாட்களில் நிறைவடையும் நிலையில் உள்ளது.
பிரதான தெய்வ சிலைகளைக் கொண்ட தரைத்தளப் பணிகள் தான் நிறைவுப் பெறவுள்ளது. இதற்கு மேல் உள்ள முதல் மற்றும் இரண்டாம் தளங்களின் பணிகள் இந்தாண்டு டிசம்பர் மாதத்தில் தான் முடிவடையும் எனக் கூறப்படுகிறது. அருங்காட்சியகம் உள்ளிட்டவற்றுடன் கோயிலைச் சுற்றி நடைபெறவுள்ள மூன்றாம் கட்டப் பணிகள் அடுத்தாண்டு இறுதியில் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது.
ராமர் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு பழுதுப் பார்க்க வாய்ப்பில்லாத வகையில் மிகவும் உறுதியாகவும், திட்டமிட்டும் கட்டப்படுவதாகக் கூறியுள்ளார் கட்டுமான குழுவின் தலைவர் முருகேந்திர மிஸ்ரா. மேலும், கோயிலின் அஸ்திவார மண் பொறியியல் ரீதியில் பக்குவப்படுத்தப்பட்ட 47 அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது.
அட்ராசக்க ….. விஜய் நடிக்கும் ‘The Greatest Of All Time’ படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?
6.5 ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம் வந்தாலும் உறுதியாக நிற்கும் வகையில் கட்டுமானம் அமைந்துள்ளது. இதற்காக, சென்னை ஐஐடி பொறியாளர்களின் ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது. ராமநவமி நாளில் சூரிய கதிர்கள், ராமர் மீது விழும் வகையில் கட்டிட வடிவமைப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1,800 கோடி ரூபாய் செலவில் இந்த கோயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
சிற்பம் மற்றும் வாஸ்து, சாஸ்திரங்கள் முறைப்படி, சந்திரகாந்த் சோம்புரா என்பவர் கட்டிடத்தை வடிவமைத்த நிலையில், டாடா மற்றும் எல் அண்ட் டி நிறுவனங்கள் கட்டுமானப் பணியை மேற்கொண்டுள்ளனர்.