

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக, ராட்சத மணி தயாரிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
வாத நோய்களுக்கு தீர்வளிக்கும் தழுதாழை மூலிகை!
நாட்டிலேயே மிகப்பெரிய மணியாகக் கருதப்படும், இந்த ராட்சத மணியின் எடை மட்டும் 2,400 கிலோ ஆகும். கோயில் மணிகளைத் தயாரிப்பதற்கு பெயர் பெற்ற உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் எட்டாக் மாவட்டத்தில் தான் இந்த மணி உருவாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சலேஸ்சர் நகரில் 30 தொழிலாளர்கள் இணைந்து இந்த மணியை வடிவமைத்துள்ளனர்.
தங்கம், வெள்ளி, செம்பு, ஜிங், இரும்பு, பாதரசம் உள்பட 8 உலோகங்களைக் கொண்டு ராட்சத மணி தயாரிக்கப்பட்டுள்ளது. ராமர் கோயிலுக்காக ராட்சத மணிக்கு 25 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறார் தொழிலதிபர் ஆதித்ய மிட்டல்.
மறைந்து போன தனது சகோதரியின் விருப்பத்தின் படி, ராமர் கோயிலுக்கு ராட்சத மணியை அளிப்பதாகவும், அவர் கூறியுள்ளார். ஆறு அடி உயரம், ஐந்து அடி அகலம் உள்ள இந்த ராட்சத மணியை அடித்தால் 2 கி.மீ. தூரத்திற்கு சத்தம் கேட்கும் எனக் கூறப்படுகிறது.
கசப்பில்லா பாகற்காய் தொக்கு செய்வது எப்படி?
பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும் ஆலய மணி, ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக ரயில் மூலம் அயோத்திக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.


