Homeசெய்திகள்இந்தியாPFI சேர்ந்த 8 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து

PFI சேர்ந்த 8 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து

-

PFI சேர்ந்த 8 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து

சென்னை உயர்நீதிமன்றத்தால் PFI சேர்ந்த 8 பேருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

PFI சேர்ந்த 8 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தேச விரத செயல்களில் ஈடுபட்டதாக கூறி தடை செய்தது. இதனையடுத்து நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தியது.

இதில் 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 8 பேர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.

PFI சேர்ந்த 8 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து

குறிப்பாக சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லாத நிலையிலும் எந்த குற்றமும் செய்யாத நிலையிலும் யூகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு லட்சம் ரூபாய்க்கான இரு நபர் உத்தரவாதத்தை தாக்கல் செய்து ஜாமின் பெற்றுக் கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில் தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ உச்சநீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இம்மனு மீதான விசாரணை இன்று பேலா எம்.திரிவேதி மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய கோடைகால விடுமுறை அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது என்.ஐ.ஏ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ள குறிப்பிட்ட 8 பேரும் கைது செய்யப்பட்டபோது அவர்களிடம் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் புகைப்படங்கள் மற்றும் 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை இஸ்லாமிய தலைவர்கள் ஆளும் நாடாக மாற்றுவதற்கான திட்டங்கள் இருந்ததாக குற்றம்சாட்டினார்.

PFI சேர்ந்த 8 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து

மேலும், வழக்கு விசாரணை பாதிக்கப்பட கூடும் என்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமினை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 8 பேருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமினை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MUST READ