
இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை, தமிழகம் உள்பட நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகள், இஸ்லாமியர்களின் வாழ்வில் மிக முக்கியமானவை. ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பை சுமார் 30 நாட்கள் கடைப்பிடித்து, பின்னர் ரம்ஜான் பண்டிகைக் கொண்டாடப்படும். இதற்கு அடுத்தப்படியாக, இஸ்லாமியர்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகை, தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை.
இறைத் தூதரான இப்ராஹீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுக் கூறும் விதமாகக் கொண்டாடப்படும், இந்த நாளில் ஏழைக்கு உதவுதல் என்பதைக் கடைப்பிடித்து ஆடு, மாடுகளின் இறைச்சி மற்றும் அரிசி ஆகியவற்றைக் கொண்டு பிரியாணியை சமைத்து மற்றவர்களுக்கு கொடுத்தும், புத்தாடை அணிந்தும், மசூதிகளில் சிறப்புத் தொழுகை நடத்தியும் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.
புதிய நாடாளுமன்ற வளாகத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர்?
பக்ரீத் பண்டிகையையொட்டி, டெல்லி, மும்பை, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை முதலே சிறப்பு தொழுகைகள் நடைபெற்று வருகின்றன.