Homeசெய்திகள்இந்தியாபெங்களூருவை அதிர வைத்த குண்டுவெடிப்பு... என்ன நடந்தது?- விரிவான தகவல்!

பெங்களூருவை அதிர வைத்த குண்டுவெடிப்பு… என்ன நடந்தது?- விரிவான தகவல்!

-

 

பெங்களூருவை அதிர வைத்த குண்டுவெடிப்பு... என்ன நடந்தது?- விரிவான தகவல்!

கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் புகழ்பெற்ற உணவகத்தில் குண்டுவெடித்ததில் 9 பேர் காயமடைந்துள்ளனர். இது குண்டுவெடிப்பு தான் என்று அம்மாநிலத்தின் முதலமைச்சர் சித்தராமையா உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

அயலான் இயக்குநர் வீட்டில் நல்ல செய்தி… ரசிகர்கள் வாழ்த்து…

பெங்களூரு ஒயிட் பீல்டு பகுதியில் குந்தலஹாலியில் இயங்கி வரும் புகழ்பெற்ற உணவகமான ராமேஸ்வரம் கபேயில் மதியம் 12.55 மணிக்கு திடீரென்று பயங்கர சத்தத்துடன் மர்மப்பொருள் வெடித்தது. இதில் உணவக ஊழியர்கள் உள்பட 9 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதா? அல்லது பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டதா? என்ற சந்தேகங்கள் முதலில் எழுந்த நிலையில், உணவகத்தின் முன்பகுதியில் உணவருந்தும் இடத்தில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் சிலிண்டர் எதுவும் வெடிக்கவில்லை என்று கபே நிர்வாகம் தெரிவித்த நிலையில், இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன. சிசிடிவி காட்சிகளின் படி இரண்டு முறை வெடிகுண்டு வெடித்திருப்பது தெரிய வந்தது. வெடிகுண்டு வெடித்த இடத்தில் சந்தேகத்திற்குரிய கைப்பை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தலை வணங்குகிறேன்…. தமிழ் திரைத்துறையில் அதிர்வலையை ஏற்படுத்திய மஞ்சும்மல் பாய்ஸ்…

இந்த சம்பவம் குண்டுவெடிப்பு தான் என்று கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும் அதிசக்திவாய்ந்த குண்டு வெடித்திருக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. தீவிரவாத செயலா என்பது தெரியவில்லை, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரம் கபே பகுதியில் உள்ள மேலும் சில சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். தேசிய புலனாய்வு அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டுள்ளது. ஆறு பேர் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த இடத்தில் சந்தேகத்திற்கிடமாக இருந்த கைப்பை வெடித்ததாகவும், அந்த பையில் குண்டு இருந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தேசிய புலனாய்வு முகமை என்றழைக்கப்படும் என்ஐஏ அதிகாரிகள் இரண்டாவது நாளாக ராமேஸ்வரம் கபேயில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

MUST READ