spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாராணுவ மேஜரிடம் ரூ.1 கோடி மோசடி - பாஜக பிரமுகர் கைது

ராணுவ மேஜரிடம் ரூ.1 கோடி மோசடி – பாஜக பிரமுகர் கைது

-

- Advertisement -
kadalkanni
தலைநகர் டெல்லியில் தான் வாடகைக்கு இருந்த வீட்டை தனது சொந்த வீடு என்று கூறி ராணுவ மேஜரிடம் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல மோசடி மன்னனும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான நாகராஜ் சாகரை ஐம்மு கஷ்மீர் போலீசார் கைது செய்துள்ளனர்.
ராணுவ மேஜரிடம் ரூ.1 கோடி மோசடி - பாஜக பிரமுகர் கைது
தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான் இந்த நாகராஜ் சாகர். இவர் கடந்த 2016 ஆம் நடந்த தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.
இந்த நாகராஜ் சாகர் தமிழ்நாட்டில் பல பேரிடம் தனக்கு பல முக்கிய மத்திய அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்களை தெரியும் என்று கூறி அரசு வேலை வாங்கி தருவதாகவும், வங்கியில் பல கோடி ருபாய்க்கு லோண் வாங்கி தருவதாகவும், குறிப்பிட்ட மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க சீட் வாங்கி தருவதாகவும், இது போன்ற பல விதத்தில் ஏமாற்றி பல கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக நாகராஜ் சாகர் மீது தமிழ்நாட்டில் உள்ள பல காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.
ஒரு சில வழக்குகளில் கைது செய்யப்பட்டும் ஜாமீனில் உள்ளார்.  ஜாமீனில் வர முடியாத வழக்குகளும் இந்த நாகராஜ் சாகர் மீது உள்ளது. தமிழ்நாட்டில் பல வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியானதால் நாகராஜ் தனது இருப்பிடத்தை தலைநகர் டெல்லிக்கு மாற்றினார்.
கடந்த சில மாதங்களாக டெல்லியில் உள்ள பிரதான குடியிருப்பு பகுதியான Defence Coloney-ல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி ஒருவரின் வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தார். தான் ஒரு VVIP என்று கூறிக் கொண்டு தங்கி இருந்த நாகராஜ் சாகர் தான் வாடகைக்கு தங்கி இருந்த வீட்டை தனது சொந்த வீடு என்று கூறி ராணுவத்தில் ஐம்மு கஷ்மீரில் மேஜராக பணிபுரியும் தரம் குமார் தீட்சித் என்பரிடம் விற்க முடிவு செய்து, அவரிடம் முதலில் ஒரு கோடி ரூபாய் வாங்கி உள்ளார் நாகராஜ் சாகர்.
ராணுவ மேஜரிடம் ரூ.1 கோடி மோசடி - பாஜக பிரமுகர் கைது
ஒரு கட்டத்தில் மேஜர் தரம் குமாருக்கு சந்தேகம் வரவே ஐம்மு கஷ்மீர் அனந்னாக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேஜரின் புகாரின் பேரில் மோசடி மன்னன் நாகராஜ் சாகரை டெல்லி போலீசார் உதவி உடன் ஐம்மு கஷ்மீர் போலீசார் கைது செய்து கஷ்மீர் அழைத்து சென்று சிறையில் அடைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டு தற்போது ஐம்மு கஷ்மீர் சிறையில் உள்ள நாகராஜ் சாகர் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு , குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கள், அமைச்சர்கள் பியூஸ் கோயில், தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களுடன் எடுத்ததாக கூறப்படும் போட்டோக்களையும் வைத்து அனைவரையும் ஏமாற்றி பணம் மோசடி செய்யும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்துடனும் எடுத்த போட்டோவையும் பலரிடம் காட்டியுள்ளார். ராணுவ மேஜரை ஏமாற்றி உள்ள இந்த நாகராஜ் சாகர் இது போன்று ஏராளமானவரிடம் பல வழிகளில் ஏமாற்றி பணம் பெற்றிருப்பதாகவும் இனியும் இவரிடம் யாரும் ஏமாற வேண்டாம் என்றும் டெல்லி மற்றும் ஐம்மு கஷ்மீர் போலீசாரும் பொது மக்களை கேட்டு கொண்டுள்ளனர்.

MUST READ