Homeசெய்திகள்ஆந்திரா: போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு லிங்க் அனுப்பி பணம் ரூ. 2.20 லட்சம் எடுத்த சைபர் குற்றவாளிகள்

ஆந்திரா: போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு லிங்க் அனுப்பி பணம் ரூ. 2.20 லட்சம் எடுத்த சைபர் குற்றவாளிகள்

-

- Advertisement -

 

ஆந்திரா: போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு லிங்க் அனுப்பி பணம் ரூ. 2.20 லட்சம் எடுத்த சைபர் குற்றவாளிகள்

ஸ்மார்ட் யுகத்தில் ஒரு லிங்க் அனுப்பி தொட்டவுடன் மோசடி என்னவென்று தெரிந்து கொள்வதற்குள் வங்கியில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது. அவ்வாறு தற்போது, ​​கர்னூல் மாவட்டத்தில் இணைய மோசடிகள் அதிகரித்து வருகின்றன. சைபர் குற்றவாளிகள் சாமானியர்களை மட்டுமில்லாமல், காவல்துறைக்கும் சவால் விடுகின்றனர். இந்நிலையில் கொடுமூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மன்சுருதீன் கணக்கில் இருந்து  ரூ. 2.20 லட்சம் குற்றவாளிகளால் எடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இம்மாதம் 4-ம் தேதி இன்ஸ்பெக்டரின் வங்கி கணக்கில் இருந்து பணம் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டரின் போனுக்கு வந்த லிங்க்கை கிளிக் செய்த பின்னர் அவருடைய சிம் பிளாக் ஆனதால் இதனை உடனடியாக கண்டுபிடிக்க முடியாமல் சிம் கார்ட் ஆக்டிவேட் ஆனவுடன் பணம் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்ததையடுத்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

வங்கி அதிகாரிகளை இன்ஸ்பெக்டர் மன்சுருதீன் கேட்டபோது சைபர் குற்றவாளிகளால் போன் ஹேக் செய்யப்பட்டு பணம் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் சிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சைபர் குற்றவாளிகளால் தினந்தோறும் சாமான்ய மக்கள் முதல் அதிகாரிகள் வரை பாதிக்கப்படுகின்றனர்.

MUST READ