- Advertisement -
தமிழ் உரிமை இயக்கத்தினர் மீது வணிக நிறுவனங்கள் அளித்த புகாாின் பேரில் போலீசாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள கடைகளில் ஆங்கிலத்தில் இருந்த வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை நேற்று தமிழ் உரிமை இயக்கத்தினர் அடித்து நொறுக்கினா். இதனால் வியாபாாிகள் ஆத்திரமடைந்தனா்.
புதுச்சோி காவல்துறையினரிடம் தமிழ் உரிமை இயக்கத்தினர் மீது வியாபாாிகள் புகாா் அளித்தனா். அந்த புகாாின் அடிப்படையில் பெரியகடை போலீசாா் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
மேலும் தமிழ் உரிமை இயக்கத்தினரை தீவிரமாக தேடும் பணியிலும் காவல்துறையினா் ஈடுபட்டு வருகின்றனர். இது புதுச்சோியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
