பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஒன்றிய அமைச்சர்களாக 70க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் பதவியேற்றனர்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த நிலையில், இந்த முறை பாஜகவுக்கு தன்ப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் மோடியே மீண்டும் பிரதமராக பதவியேற்க ஆதரவு தெரிவித்தன. இதனையடுத்து நேற்று பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். நேற்று பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்களுக்கு இன்று இலாக்கா ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஒன்றிய அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான் மற்றும் நிர்மலா சீதாராமன் , ஜெய்சங்கர் , பியூஷ் கோயல் மற்றும் தர்மேந்திர பிரதான், குமாரசாமி மற்றும் ஜிதன் ராம் மாஞ்சி , கிரி ராஜ் சிங், அஸ்வினி வைஷ்ணவ் பதவியேற்றனர்
. பிரகலாத் ஜோஷி மற்றும் விரேந்திர குமார் , ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் பூபேந்திர யாதவ், கஜேந்திர சிங் ஷெகாவத், கிரண் ரிஜூஜூ பதவியேற்றனர். அன்னபூர்ணா தேவி மற்றும் ஹர்தீப் சிங் பூரி, சிராக் பாஸ்வான், கிஷண் ரெட்டி பதவியேற்றனர். குறிப்பாக பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடு, ஒன்றிய அமைச்சராக பதவியேற்றார். 36 வயதான இவர், இந்திய வரலாற்றில் மிகக் குறைந்த வயது ஒன்றிய அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை சேர்ந்த எல்.முருகன் மீண்டும் மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார்.