
வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமல்ல வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலையும் குறைக்கப்பட்டிருக்கிறது.
நிலவின் தரையில் கந்தகம் இருப்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது!
கடந்த இரண்டு மூன்று நாட்களாக சமையல் சிலிண்டர் விலை தொடர்பான செய்திகள் மக்களிடம் சற்று ஆறுதலை ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில், வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் ஒன்றின் விலை ரூபாய் 157.50 குறைக்கப்பட்டிருக்கிறது.
இதற்கான அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 92 ரூபாய் குறைக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதத்தில் 2,268 ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்பட்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை, மாதம் மாதம் தொடர்ச்சியாகக் குறைக்கப்பட்டு வந்தது.
ஒரே நாடு, ஒரே தேர்தல்- சிறப்புக் குழுவை அமைத்தது மத்திய அரசு!
ஏப்ரல் மாதம் 2,192 ரூபாயாகவும், மே மாதம் 2,021.50 ரூபாயாகவும் இருந்தது. அந்த வகையில், தற்போது ரூபாய் 1,695-க்கு ஒரு சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் வணிக சிலிண்டர் விலை 573 ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது.