
19 கிலோ எடைக்கொண்ட வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 57 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் காலமானார்!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 57 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 19 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 1,942.50 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 101 ரூபாய் உயர்த்தப்பட்டு, 1,999.50 ரூபாயாக இருந்த நிலையில், இந்த மாதம் விலை குறைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு- காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 37 பேர் உயிரிழப்பு!
அதுபோல், 14.2 கிலோ எடைக்கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றமின்றி 918.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.