Homeசெய்திகள்இந்தியா"ஒப்புகைச் சீட்டு"- உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி!

“ஒப்புகைச் சீட்டு”- உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி!

-

 

உச்சநீதிமன்ற நீதிபதியாக இரண்டு பேரை கொலீஜியம் அமைப்பு பரிந்துரை!
File Photo

வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் விவிபேட்டில் பிரிண்ட் ஆகும் ஒப்புகைச் சீட்டு குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

லக்னோ அணியை பழி தீர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

100% ஒப்புகைச் சீட்டுகளை பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று (ஏப்ரல் 24) காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, “விவிபேட் தொடர்பான வழக்கில் எங்களுக்கு சில கேள்விகள் உள்ளது. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா? மைக்ரோ கண்ட்ரோலர் ஒருமுறை மட்டுமே ப்ரோகிராம் செய்யப்படக் கூடியதா?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தங்கள் கேள்விக்கான விளக்கங்களை அளிக்க பிற்பகல் 02.00 மணிக்கு தேர்தல் ஆணைய அதிகாரி நேரில் ஆஜராக வேண்டும்” என்று வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

மோசமான பீல்டிங் காரணமாக தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

இந்த வழக்கு தொடர்பாக, இன்றே உச்சநீதிமன்ற நீதிபதிகள் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்கவுள்ளனர்.

MUST READ