அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் கூடி நடைபெற்றது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிரான பிரச்சாரங்கள் எவ்வாறு எடுத்து செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான இந்திரா பவனி நடைபெற்றது. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தலைமையில் காரிய கமிட்டி கூட்டம் கூடியது. இதில் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால், சசி தரூர் மற்றும் காரிய கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சியின் பெயர் பெற்ற திட்டமான ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்’ எனும் பெயரை மத்திய அரசு மாற்றியது. இதற்கு எதிராக கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள் பலரும் செய்தியாளர் சந்திப்பு கூட்டங்களை நடத்தி மத்திய அரசின் நடவடிக்கை குறித்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற காரிய கமிட்டி கூட்டத்தில் இந்த விவகாரங்கள் குறித்து தீவிரமாக ஆலோசிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக எதிர்வரும் நாட்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் பெயர் மாற்றம் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னெடுப்புகள் குறித்து ஆலோசிப்பதாகவும், நாட்டில் சிறுபான்மையினர் ஒடுக்குமுறை நடைபெறுவதற்கு எதிரான பிரச்சாரங்களை தீவிரப்படுத்துவது குறித்தும் காரிய கமிட்டியில் ஆலோசித்ததாக தெரிகிறது.
இவை தவிர நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து தீர்மானங்களையும் காங்கிரஸ் காரிய கமிட்டி நிறைவேற்ற உள்ளதாகவும், 2026ம் ஆண்டில் நடைபெறவுள்ள பல்வேறு மாநில சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்றது.
4 திட்டங்கள் மூலம் மாதம் ரூ.4000 மிச்சமாகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


