வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா மாதிரிகளை சேகரிக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் BF.7 ஒமிக்ரான் வகை வைரஸ் 7 நபருக்கு கண்டறியப்பட்டதை தொடர்ந்து சர்வதேச விமான பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. உருமாறிய கொரோனா வைரஸ் சீனாவில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இதன்படி மத்திய சுகாதார துறை ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகின்றன.

கடந்த ஒன்றரை மாதமாக பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தொற்றின் பரவல் வேகம் அதிகரித்துள்ளதால், நாள்தோறும் பல ஆயிரம் பேர் மடிந்து வருகின்றனர். சீனாவில் அடுத்த 90 நாட்களில் கொரோனா தொற்றால் பல லட்சம் பேர் செத்து மடிவார்கள் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
