
ரயில்வேயில் பணி வழங்க, கையூட்டாக நிலங்களைப் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் சி.பி.ஐ., டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் புதிய குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. இதில் பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் மற்றும் முன்னாள் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் பீகார் மாநில முதலமைச்சர் ராப்ரி தேவி ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளனர்.

பேனா நினைவுச் சின்னம்- வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!
இதனையடுத்து, பீகார் மாநில துணை முதலமைச்சர் பதவியில் இருந்து தேஜஸ்வி யாதவை பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் நீக்க வேண்டும் என பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஷில்குமார் வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் குலைக்கவே, பா.ஜ.க. சி.பி.ஐ., அமலாக்கத்துறைப் போன்றவற்றைப் பயன்படுத்தி, இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்கள், பா.ஜ.க.வை விமர்சனம் செய்துள்ளனர்.
டெல்லி செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்!
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால், துணை முதலமைச்சர் பதவியில் தேஜஸ்வி யாதவ் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, மாட்டுத்தீவன ஊழல் உள்ளிட்ட வழக்குகளில் சிறைக்கு சென்ற லாலு பிரசாத் யாதவ், உடல்நலக்குறைவு காரணமாக ஜாமீன் பெற்று, சிகிச்சைப் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.