ஜி20 மாநாடு- டெல்லிக்கு 2 நாட்கள் பொதுவிடுமுறை
இந்தியாவில் வரும் செப்டம்பர் 9,10 ஆகிய இருநாட்கள் ஜி20 உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இதையடுத்து 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்களின் கூட்டமான ஜி 20 உச்சி மாநாடு செப்டம்பர் 9 மற்றும் செப்டம்பர் 10 ஆகிய தேதிகளில் டெல்லியின் பிரகதி மைதானத்தில் சமீபத்தில் தொடங்கப்பட்ட அதிநவீன பாரத் மண்டபம் மாநாட்டு மையத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், சீனப் பிரதமர் ஜி ஜின்பிங், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஜி20 மாநாட்டை முன்னிட்டு வாகன் போக்குவரத்தை சீராக்க, டெல்லியில் உள்ள அனைத்து அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் அலுவலகங்கள், வங்கிகள், கடைகள் மற்றும் பள்ளிகள் செப்டம்பர் 8 முதல் செப்டம்பர் 10 வரை மூடப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 8 முதல் செப்டம்பர் 10 வரை அரசு விடுமுறை அறிவிக்குமாறு டெல்லி காவல்துறையின் சிறப்பு ஆணையர் நகர அரசாங்கத்தின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.