Homeசெய்திகள்இந்தியா"ஓட்டுப்போடவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இருக்காது"- நடிகர் பிரகாஷ் ராஜ் பேட்டி!

“ஓட்டுப்போடவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இருக்காது”- நடிகர் பிரகாஷ் ராஜ் பேட்டி!

-

 

"ஓட்டுப்போடவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இருக்காது"- நடிகர் பிரகாஷ் ராஜ் பேட்டி!

“ஓட்டுப்பொடவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமையும் தகுதியும் இருக்காது” என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் தனது வாக்கினைப் பதிவுச் செய்த பிறகு நடிகர் பிரகாஷ் ராஜ் இவ்வாறு கூறினார்.

“மே 01- ஆம் தேதி முதல் தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தைத் தொட வாய்ப்பு”!

நீண்ட வரிசை இருந்த போதும், மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து நடிகர் பிரகாஷ் ராஜ், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் பிரகாஷ் ராஜ், “தேர்தலில் வாக்களிக்க வேண்டியது மிக முக்கியமான ஒன்று; ஓட்டுப்போடவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இருக்காது” எனத் தெரிவித்தார்.

இதனிடையே, பெங்களூருவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை நடிகர் பிரகாஷ் ராஜ் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, இருவரும் உணவருந்தினர்.

ஆஜராகாத நிர்மலாதேவி- தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்!

இந்தியாவில் மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அதற்கான டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது. வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி டூடுல் வெளியிடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

MUST READ