spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆஜராகாத நிர்மலாதேவி- தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்!

ஆஜராகாத நிர்மலாதேவி- தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்!

-

- Advertisement -

 

ஆஜராகாத நிர்மலாதேவி- தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்!

we-r-hiring

மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்.

சிங்கிள் ஷாட்டில் அசத்திய விஷால்… ரத்னம் மேக்கிங் வீடியோ வைரல்…

கல்லூரி மாணவிகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி, உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைதாகினர். இது தொடர்பான வழக்கு விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அப்போது, நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் குற்றவாளிகள் என நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பான வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், வழக்கில் இன்று (ஏப்ரல் 26) காலை 11.00 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் அறிவித்திருந்தார்.

அஜித்தின் கிளாசிக் பில்லா… திரையரங்குகளில் ரீ ரிலீஸ்….

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், வழக்கின் தீர்ப்பை வரும் ஏப்ரல் 29- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

MUST READ