Homeசெய்திகள்இந்தியாபிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

-

 

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
Photo: PM Narendra Modi

தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி பதிலளிக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் ‘SK23’ படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்!

இஸ்லாமியர்கள் குறித்து தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி அவதூறாகப் பேசியதாக காங்கிரஸ் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக ராகுல் காந்தி மீது பா.ஜ.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் விளக்கம் அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதில், “வரும் ஏப்ரல் 29- ஆம் தேதி காலை 11.00 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்; முக்கியத் தலைவர்களின் பேச்சு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்” என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

ஓடிடிக்கு வரும் விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி ஸ்டார்!

அதேபோல், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோருக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

MUST READ