Homeசெய்திகள்இந்தியாஏப்ரல் 29 வரை கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடத் தடை - இந்திய தேர்தல் ஆணையம்...

ஏப்ரல் 29 வரை கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடத் தடை – இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி

-

- Advertisement -

கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் உள்ளிட்ட 3 மாநில வாக்குப்பதிவு ஏப்ரல் 9ம் தேதி முடிந்தாலும், ஏப்ரல் 29ம் தேதி மாலை 6.30 மணி வரை கருத்துக்கணிப்பு முடிவுகளை ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.ஏப்ரல் 29 வரை கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடத் தடை - இந்திய தேர்தல் ஆணையம் அதிரடிபுதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் ஆகிய 3 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு ஏப்ரல் 9ம் தேதி அன்று நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாகவும், மேற்குவங்க மாநிலத்திற்கு ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 என 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 9-ம் தேதி அன்று புதுச்சேரி கேரளா, அசாம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடையும் சூழலில் 3 மாநிலங்களிலும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் வெளியிடக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் மேற்குவங்க மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் அடுத்து நடைபெறவுள்ளதால் அதில் 3 மாநிலங்களின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என கருதி தேர்தல் ஆணையம் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதன்படி மேற்குவங்க மாநிலத்திற்கு இறுதி கட்டமாக ஏப்ரல் 29-ம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் அன்று மாலை 6.30 மணிக்கு மேல் தேர்தலுக்கு பிந்திய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுக் கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

we-r-hiring

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் கீழ் இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி கருத்துக்கணிப்பு முடிவுகள் அல்லது பிற செயல்களில் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஈடுபட்டால் 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

மேற்கு வங்கம்: எஸ்.ஐ.ஆர் பணிகளில் ஈடுபட்டுள்ள நீதிபதிகளின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு

MUST READ