spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஆதாரை பிறந்த தேதி ஆவணமாக பயன்படுத்த முடியாது - EPFO அறிவிப்பு

ஆதாரை பிறந்த தேதி ஆவணமாக பயன்படுத்த முடியாது – EPFO அறிவிப்பு

-

- Advertisement -

வருகால வைப்பு நிதி கணக்குகளில் இனி ஆதார் பிறப்பு சான்று ஆவணமாக ஏற்கப்படாது என வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்துள்ளது.

we-r-hiring

நாட்டில் மத்திய, மாநில அரசுகளின் சேவைகளில் ஆதார் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. பிறந்த தேதி, இருப்பிடம் உள்ளிட்டவற்றிற்கு ஆதார் அடிப்படை ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் கடந்த நில நாட்களுக்கு முன்னர் பிறந்த தேதியை உறுதி செய்ய சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களின் பட்டியலில் இருந்து ஆதார் கார்டை நீக்கும் படி வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் உத்தரவிட்டது. இதனையடுத்து இந்த உத்தரவை செயல்படுத்தும் விதமாக வருங்கால வைப்பு நிதி அமைப்பு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது, வருகால வைப்பு நிதி கணக்குகளில் இனி ஆதார் பிறப்பு சான்று ஆவணமாக ஏற்கப்படாது என வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அனைத்து மண்டல அலுவலகங்கள், ஆணையர்கள் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்கு வருங்கால வைப்பு நிதி அமைப்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், பிறந்த தேதிக்கான ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்களில் இருந்து ஆதார் நீக்கப்படுவதாகவும், பி.எஃப். கணக்குகளின் மென்பொருளில் தேவையான மாற்றத்தை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

MUST READ