- Advertisement -
குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே சுபாஷ்நகர் கடற்கரை பகுதியில், அரிசி, சர்க்கரை ஏற்றி வந்த சரக்கு கப்பலில் தீவிபத்து ஏற்பட்டது.குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் அருகே சுபாஷ்நகர் என்ற இடத்தில் அரிசி சர்க்கரை ஏற்றி வந்த சரக்கு கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அரிசி சுமையால் தீ தீவிரமடைந்ததால், கப்பல் நடுக் கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டது. சரக்கு கப்பலில் பற்றிய தீயை அணைக்க 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன. இதோடு சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் கடலோர காவல்படை கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கப்பலில் ஏற்பட்ட தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
எடப்பாடி டெல்லி விசிட் ஃபிளாப்! டோஸ் விட்ட அமித்ஷா! அண்ணாமலைக்கு புது அசைன்மெண்ட்!