வணிக வளாகங்களில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து
உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்த நாசமாகின.
கான்பூரின் பான்ஸ்மண்டி பகுதியில் உள்ள ஹம்ராஜ் மார்க்கெட்டில் அதிகாலை 3 மணி அளவில் தீப்பிடித்து எறிய தொடங்கியது.

அந்த நேரத்தில் காற்று பலமாக வீசிக் கொண்டிருந்ததால் அடுத்தடுத்த கட்டிடங்களுக்கு தீ பரவியது. இதனால் அருகில் இருந்த மசூத் டவரின் இரண்டு கட்டிடங்கள் உள்ளிட்ட வணிக வளாகங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் மலமலவென பரவியத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டன.
தீ பரவும் வேகம் அதிகமாக இருந்ததால் கூடுதல் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 16 தீயணைப்பு வாகனங்கள் மூலம் சுமார் 7 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ஓரளவிற்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
எனினும் தீ முழுமையாக அனைக்க படாததால் அப்பகுதியிலுள்ள 500க்கும் மேற்பட்ட சிறிய கடைகள் தீ விபத்து அபாயத்தில் உள்ளதாக கான்பூர் காவல் இணை ஆணையர் ஆனந்த் பிரகாஷ் திவாரி கூறியுள்ளார்.
முதல் கட்ட அது விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.