Homeசெய்திகள்இந்தியா'ஃபிளையிங் கிஸ்'- சர்ச்சையில் ராகுல் காந்தி!

‘ஃபிளையிங் கிஸ்’- சர்ச்சையில் ராகுல் காந்தி!

-

 

'ஃபிளையிங் கிஸ்'- சர்ச்சையில் ராகுல் காந்தி!
Photo: Sansad TV

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இரண்டாவது நாளாக இன்று (ஆகஸ்ட் 09) தொடர்ந்தது.

சந்திரபாபு உட்பட 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு

பதவி நீக்கம் திரும்பப் பெறப்பட்டப் பிறகு, முதன்முறையாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் பேசினார். மணிப்பூர் விவகாரம், விவசாயிகளின் நிலை உள்ளிட்டவைக் குறித்து பேசினார். இதனால் அவையில் காரசார விவாதம் நடந்தது.

ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, “பாரத் மாதாவை கொலை செய்து விட்டீர்கள் என பேசும் ராகுல்காந்தி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பண்டீட்டுகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு அவர்களுக்கு எப்போது நீதி வழங்குவீர்கள்? காஷ்மீரில் பிரச்சனை இருந்தபோது காங்கிரஸ் பிரதமர்கள் யார் நேரில் சென்றனர். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் காஷ்மீரில் அமைதி ஏற்பட்டது. ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் இன்று அவை விட்டு வெளியேறும் போது தனக்கு “ஃபிளையிங் கிஸ் ” கொடுத்தார்” என்றார்.

இந்த நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்தித்த பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய அமைச்சர் ஷோபா கரண்டலஜே உள்ளிட்டோர் ராகுல் காந்தி மீது புகார் தெரிவித்து மனு அளித்துள்ளனர்.

ராகுல்காந்தி எனக்கு Flying Kiss கொடுத்தார்- ஸ்மிருதி இராணி

அந்த மனுவில், “மக்களவையில் பா.ஜ.க. பெண் உறுப்பினர்களைப் பார்த்து ராகுல் காந்தி, ‘ஃபிளையிங் கிஸ்’ கொடுப்பது போல், சைகை செய்துள்ளார். எனவே, ராகுல் காந்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.

MUST READ