குஜராத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக வைத்திருந்த குற்றத்திற்காக கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு குஜராத்தின் அம்ரேலி நகரைச் சேர்ந்த காசிம் சோலங்கி (20), சத்தார் இஸ்மாயில் (52) மற்றும் அக்ரம் ஹாஜி (30) ஆகிய 3 பேரின், வீடுகளில் 40 கிலோ மாட்டிறைச்சி வைத்திருந்த குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு குஜராத்தின் கீழமை நீதிமன்றத்தில், விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அத்தீா்ப்பில், பசுவதைக்கு மாட்டிறைச்சி வைத்திருந்த குற்றத்திற்காக, 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி, தலா ரூ.6 லட்சம் என 3 பேருக்கும் சேர்த்து மொத்தம் ரூ. 18 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். குஜராத்தில், மாட்டிறைச்சி வைத்திருந்ததாக 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்திருப்பது இதுவே முதல்முறை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், குஜராத் விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 2017-ல் நிறைவேற்றப்பட்டது. மாடுகளைக் கொல்பவர்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் அதிகபட்ச ஆயுள் தண்டனை வரை வழங்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. இத்தீர்ப்பு, குஜராத் விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி கடுமையான தண்டனையை உறுதி செய்கிறது. இது குஜராத் வரலாற்றில் ஒரு மைல்கல் தீர்ப்பாகக் கருதப்படுகிறது.
தீபாவளி போனஸாக வழங்கிய தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்வதா? – டி.டி.வி. தினகரன் ஆவேசம்


