spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாவிநாயகருக்கு 2.20 கோடி ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகருக்கு 2.20 கோடி ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்

-

- Advertisement -

விநாயகருக்கு 2.20 கோடி ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்

ஆந்திராவில் 21 அடி உயர தசாவதார கணபதிக்கு 2.20 கோடி ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

விநாயகர்

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரியில் ஒவ்வொரு ஆண்டும் ஆர்ய வைஷ்ய சங்கத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தி உற்சவம் மிக சிறப்பாக கொண்டாடப்படும். அவ்வாறு இந்த ஆண்டு ஆர்ய வைஷ்ய சங்கங்கள், வணிக மற்றும் வியாபார சங்கங்கள், பல வங்கி அதிகாரிகள் இணைந்து ஏராளமான பக்தர்களின் உதவியுடன் பணத்தால் அலங்கரிக்க முடிவு செய்தனர்.

விநாயகர்

we-r-hiring

இதனையொட்டி கடந்த 20 நாட்களாக கடும் சிரமத்திற்கு மத்தியில் ரூ.2 கோடி 20 லட்சம் ரூபாய் நோட்டுகளை கொண்டு 21 உயர தசாவதார விநாயகர் சிலை அலங்கரிக்கப்பட்டது. இந்த விநாயகரை வழிபாடு செய்ய தனி வரிசையும் போட்டோ எடுத்து கொள்ள தனி வரிசையை விநாயகர் சிலை கமிட்டி நிர்வாகத்தினர் செய்தனர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

MUST READ