Homeசெய்திகள்இந்தியாஅரியானாவில் காங்கிரஸ் வெற்றிநடை போடுகிறது; பாஜக ஆலோசனை

அரியானாவில் காங்கிரஸ் வெற்றிநடை போடுகிறது; பாஜக ஆலோசனை

-

அரியானாவில் காங்கிரஸ் மாபெரும் வெற்றியை நோக்கி போய் கொண்டிருக்கிறது. பாஜக தோல்விக்கான காரணம் என்ன என்று ஆய்வு செய்ய வேண்டிய நேரம் நெருங்கி விட்டது.

அரியானாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை காங்கிரஸ் 58 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 22 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. அரியானாவில் இருக்கும் 90 தொகுதிகளுக்கு கடந்த அக்டோபர் 5ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அங்கே மெஜாரிட்டி பெற 45 இடங்கள் தேவை. காங்கிரஸ் மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களில் முன்னிலை வகிப்பதோடு மட்டும் அல்லாமல், அங்கே காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ