Homeசெய்திகள்இந்தியா'உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு?'- நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பதில்!

‘உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு?’- நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பதில்!

-

 

5,000 வழக்குகளுக்கு ஒரு நீதிபதி என்ற விகிதாச்சாராத்தில், நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

15 வருடங்களுக்குப் பிறகு ரீரிலீஸ் செய்யப்படும் சுப்ரமணியபுரம்….. சசிகுமார் அறிவிப்பு!

நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தின் மக்களவையில் பதிலளித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், உச்சநீதிமன்றத்தில் ஒரு நீதிபதியின் கீழ் 2,052 வழக்குகள் என்ற விகிதாச்சார அடிப்படையில், வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் லியோ….. அடுத்த அறிவிப்பு எப்போது தெரியுமா?

அதேபோல், நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் 60,64,939 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாவட்டங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களைப் பொறுத்த வரை 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், இவற்றில் 5,388 மாஜிஸ்திரேட் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் மத்திய சட்டத்துறை அமைச்சர் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளார்.

MUST READ