spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமோடி அதிகாரத்திலிருந்து நீக்கப்படும் வரை நான் உயிருடன் இருப்பேன் -  மல்லிகார்ஜூன கார்கே உறுதி

மோடி அதிகாரத்திலிருந்து நீக்கப்படும் வரை நான் உயிருடன் இருப்பேன் –  மல்லிகார்ஜூன கார்கே உறுதி

-

- Advertisement -

பிரதமர் மோடி அதிகாரத்திலிருந்து நீக்கப்படும் வரை தாம் உயிருடன் இருப்பேன் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகளுக்கு பின்னர் ஜம்மு- காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 18ஆம் தேதியும், 2ஆம் கட்ட தேர்தல் கடந்த 25ஆம் தேதியும் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்நிலையில், நாளை மறுதினம் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி காஷ்மீரில் இன்று  அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டன.

we-r-hiring

ஜம்மு – காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜஸ்ரோட்டா என்ற இடத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர்
மல்லிகார்ஜூன கார்கே கலந்துகொண்டு கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  பொதுக்கூட்ட மேடையில் கார்கே உரையாற்றி கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென  உடல்நலக்
குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து, விழா ஏற்பாட்டாளர்கள் அவரை இருக்கைக்கு அழைத்துச் சென்றனர்.

சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் வாக்காளர்கள் மத்தியில் உரையாற்றிய  மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்பப் பெற்றுத் தர
இந்தியா கூட்டணி போராடும் என தெரிவித்தார். தனக்கு 83 வயதாகிறதாகவும், அதே வேளையில், வெகு சீக்கிரத்தில் தான் ஒன்றும் சாகப் போவதில்லை கூறினார். மேலும், பிரதமர் மோடி அதிகாரத்திலிருந்து நீக்கப்படும் வரை தாம் உயிருடன் இருப்பேன் என்றும் மல்லிகார்ஜூன கார்கே உறுதிபட தெரிவித்தார்.

இதனிடையே, அதிக வெயில் காரணமாக கார்கேவுக்கு உடல்நலக் குறைவு எற்பட்டதாகவும், எனினும் அவர் தனது உரையை நிறைவு செய்ததாகவும் காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. கார்கே பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் தமது உடல்நிலை சரியாக உள்ளதையும் உறுதி செய்தார் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. பொதுக்கூட்டத்திற்கு பின்னர் கார்கே அடுத்த நிகழ்வில் பங்கேற்க புறப்பட்டு சென்றார்.

MUST READ