spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதெலங்கானாவில் பைக்கில் சென்றவர் மீது காற்றாடி நூல் கழுத்தை அறுத்ததால் பரபரப்பு!

தெலங்கானாவில் பைக்கில் சென்றவர் மீது காற்றாடி நூல் கழுத்தை அறுத்ததால் பரபரப்பு!

-

- Advertisement -

பைக்கில் சென்றவர் மீது காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி  கொத்தகுடெம் நகரில் அமைந்துள்ள ஹெரிடேஜ் பால்  நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சந்துருகொண்டா மண்டலம் குர்ராய் குடம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணராவ்.

we-r-hiring

தெலங்கானாவில் பைக்கில் சென்றவர் மீது காற்றாடி நூல் கழுத்தை அறுத்ததால் பரபரப்பு!இந்நிலையில் கிருஷ்ணா ராவ் பணியை முடித்துக் கொண்டு பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டுருந்தபோது ​​ராமாவரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிலர் காற்றாடிகளை பறக்கவிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது காற்றாடி மாஞ்சா நூல்  கிருஷ்ணாராவ் கழுத்தில் சிக்கி தொண்டையை அறுத்தது.

இதில் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதால் உடனடியாக அவரை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கொத்தகூடம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஐதராபாத் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ