
இந்தியா கூட்டணியில் தங்கள் கட்சித் தொடர்ந்து நீடிப்பதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பீகார் மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.
அன்பு மகளே… இளையராஜா உருக்கமான பதிவு…
பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, பா.ஜ.க.வின் ஆதரவுடன் முதலமைச்சராக நிதிஷ்குமார் தொடரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பீகார் மாநில தலைவர், சிலர் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் வதந்திகளைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டினார். எனினும், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான விவகாரங்களில் காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாடு சரியா என்று சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
வெற்றி எனும் வார்த்தைக்கு 5,000 நாட்கள் கடந்தன… நடிகர் சாந்தனு உருக்கமான பதிவு…
பீகாரில் கூட்டணி முறிவுக் குறித்து வெளியாகும் செய்திகள் குறித்து முதலமைச்சர் நிதிஷ்குமார் தெளிவுப்படுத்த வேண்டும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் எம்.பி. மனோஜ் ராய் கேட்டுக் கொண்டார். இதற்கிடையே பாட்னாவில் ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்ற நிலையில், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் கலந்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.