மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, “இந்தியா கூட்டணி பா.ஜ.க.வைத் தோற்கடிக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்தால் பா.ஜ.க. வெற்றி பெறுவது சாத்தியமல்ல.
சென்னை மெட்ரோ ரயிலில் 85.89 லட்சம் பேர் பயணம்!
ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்குவது, தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிப்பதே முதன்மையான நோக்கம். சீனா தங்கள் பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக லடாக் வாழ் மக்கள் என்னிடம் கூறினர். இந்திய பகுதியை சீனா ஆக்கிரமிக்கவில்லை என பிரதமர் நரேந்திர மோடி, பொய் சொல்கிறார் என மக்கள் கூறினர். லடாக்கில் தாங்கள் சென்று வந்த பகுதிகளுக்கு தற்போது செல்ல அனுமதி கிடைப்பதில்லை என மக்கள் கூறினர்” என்றார்.